முற்றம் இதழ்

முற்றம் இதழ் 2010 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி பிறப்பெடுத்தது. திங்கள் இருமுறை வெளிவர ஆரம்பித்தது. தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிற இதழாகவே முற்றம் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

தமிழர், தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியம், தமிழகம், தமிழினம், தமிழ் ஊடகங்கள் போன்றவையை முற்றம் இதழின் கருப்பொருளாக தொடர்ந்து இருந்து வருகிறது.

சிறப்பாக சிற்றூர்களின் ஆளுமைகள், பண்பாடு, விருந்தோம்பல், உறவுகளின் மேன்மைகள் என்று நினைவில் நிற்கின்ற வாழ்க்கை முறைகளை மீள் பார்வைக்கு உட்படுத்துவதையே முற்றம் இதழ் தனது குறிக்கோளாக கொண்டுள்ளது. தமிழர்களின் அறவாழ்வுக்கெதிரான செயல்பாடுகளை சீற்றத்துடன் எதிர்க்கும் துணிச்சலும் முற்றத்திற்கு உண்டு. கடந்த தை முதல் (2013) திங்களிதழாக தொடர்ந்து வெளி வந்து கொண்டிருகிறது